பெண்கள் என்ற வகையில் நெறியான அரசியல் கலாசாரம் ஒன்றுக்காகவும் ஜனநாயகமான, நியாயமான அனைத்து மனித உரிமைகளும் மதிக்கப்படும், பாதுகாக்கப்படும் சமூகம் ஒன்றுக்காக பெண்கள் ஊடக அமைப்பு இந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிக் கொள்ள போராடுகின்றது.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக பெண்களின் தேவைகள் மற்றும் உரிமைகளை வென்றெடுப்பதற்காக பெண்களுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றை அண்மையில் பெண்கள் ஊடக அமைப்பு வெளியிட்டுள்ளது. இவ் விஞ்ஞாபனத்தில் பெண்கள் இதுவரை இழந்துள்ள உரிமைகளை வென்றெடுக்க பெண் ஜனாதிபதி வேட்பாளரின் முன்வருகை கடந்து வந்த பாதையில் இழக்கப்பட்டுள்ளது. அதை ஒரு பக்கம் விடுத்து இம்முறை போட்டியிடும் வேட்பாளர்களுக்கே இவ் அமைப்பு இக் கோரிக்கைகளை விடுத்துள்ளது.
அவ் விஞ்ஞாபனத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தீங்கற்ற, கண்ணியத்துடன் வாழும், தமது சொந்த வேலைவாய்ப்பினை தெரிவு செய்யும், தரமான சுகாதார சேவை மற்றும் கல்விக்கான அணுகும் வசதி, அரசிற்குள் வாழ்வதற்கான அனைவருக்குமான சமூகம் ஒன்றிற்காக எமது முன்னெடுப்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.
'பால்நிலை' என்பதற்கான வரையறுக்கப்பட்ட வகிபாகங்கள் சமூக ரீதியில் பின்தங்கிய நிலையிலுள்ள பெண்களின் உரிமைகள் வரலாற்று ரீதியாக குறைக்கப்பட்டுள்ளது என்பதை பெண்கள் அமைப்பு என்ற ரீதியில் வலியுறுத்துகின்றோம்.இவற்றை நாம் கோரிக்கைகளாக ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு பெண்களுக்கான தேர்தல் விஞ்ஞாபனமா முன்வைக்கின்றோம்.
பெண்களும், வரலாற்று ரீதியாக ஒதுக்கப்பட்ட ஏனைய சமுதாயங்களும் நீதிக்கான அணுகும் உரிமையை கொண்டிருக்க வேண்டும். நியாயமான முறையில் நடத்தப்படல் வேண்டும் எனவும் நாம் வலியுறுத்துகின்றோம். அனைத்து வேலையிடங்களும் பாதுகாப்பானதாகவும் இருத்தல் வேண்டும். அரசானது இந்த கோட்பாட்டினை பின்பற்றுவதோடு தனியார் துறை அதனைப் பின்பற்றுவதற்கும் கட்டாயப்படுத்த வேண்டும்.
முன்வைத்துள்ள கோரிக்கைகளில்
*நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்து நீதித்துறையின் சுயாதீனத் தன்மையை உறுதி செய்தல்
*அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை ஆகக் குறைந்தது 25 வீதமாவது பெண்களாக இருப்பதனையும் உறுதி செய்தல்.
*தேர்தல் முறைமையை உருவாக்கல்
*அரசில் தீர்மானம் எடுக்கும் நிலைகளில் பெண்கள் ஆகக் குறைந்தது 25 வீத பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதல்.
*அனைத்து அரசியல் கட்சிகளும் தமது தீர்மானம் எடுக்கும் கட்டமைப்புகளில் பெண்களை உள்ளடக்கியிருப்பதனை உறுதி செய்தல்
*19ஆவது திருத்தத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட அனைத்து சுயாதீன ஆணைக்குழுக்களுக்கும் ஆணையாளர்களை நியமிப்பதில் பால்நிலை சமத்துவத்தினை உறுதி செய்தல்.
*பெண்கள் தொடர்பான தேசிய சுயாதீன ஆணைக்குழு
*மூத்த பெண்களை அங்கீகரித்து,வீடமைப்பு, சுகாதாரம், வாழ்வாதாரம் மற்றும் போக்குவரத்து உள்ளடங்கலான கொள்கைகளை உருவாக்கல்.
அரசியலமைப்பு சீர்திருத்தம்
* வரலாற்று ரீதியாக பெண்களுக்கு எதிராக பாரபட்சம் காட்டப்படுகின்றது மற்றும் அவர்கள் ஒதுக்கப்படுகின்றனர் என்பது சார்ந்து அங்கீகாரம் வழங்கப்படுவதுடன், உடல்சார் நேர்மையைப் பெண்கள் அனுபவிப்பதற்கான விசேட உரிமைகள் மசோதா ஒன்றை உத்தரவாதப்படுத்துகின்றது. பாலியல் உரிமைகளும், இனவிருத்திச் சுகாதாரமும் வன்முறையின்றி, கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமையை கொண்டிருத்தல் வேண்டும்.
*பாலியல் அமைப்பு மற்றும் பால்நிலை அடையாளம் என்பன நேரிடையான வகைகளாக அறிமுகப்படுத்தப்படல். பாரபட்சமின்மை ஏற்பாட்டின் கீழ் பாதுகாப்பு உத்தரவாதப்படுத்தப்படல்,வரலாறுசார்ந்த மற்றும் தொடர்ச்சியான பாரபட்சத்தை அங்கீகரித்தல்.
*சொத்தினை பாரம்பரியமாக உரித்தாக்கல், பெற்றுக் கொள்ளல், முகாமை செய்தல், நிர்வகித்தல் மற்றும் கைமாற்றல் என்பவற்றுக்கு சமமான உரிமைகள் பெண்கள் பெறுவதனை உறுதி செய்தல். அத்தகைய உரிமைகளை தடுக்கும் அனைத்து பாரபட்சமான சட்டங்களும் (விசேடமாக தேசவழமைச் சட்டம் மற்றும் சட்ட அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தை உள்ளடக்கல்) நீக்கப்படல் அல்லது திருத்தப்படலை உறுதி செய்தல்.
*முஸ்லிம் பெண்களின் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்படுவதனை உறுதி செய்து, 1951ஆம் ஆண்டு முஸ்லிம் விவாகம் மற்றும் விவாகரத்துச் சட்டத்தினை திருத்தல்
*குற்றவியல் கோவை மற்றும் தேர்தல் சட்டங்களை திருத்தி, அரசியல் வாழ்க்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறையை அடையாளப்படுத்தும் சட்டங்களை அறிமுகப்படுத்தல்.
*வறுமையிலுள்ள பெண்களின் பிரச்சினைகளினை வெளிப்படுத்தும் விதத்தில் விசேடமான கொள்கைகளினை இயற்றுவதற்குக் கடப்பாடுடையதாகவிருப்பதுடன் பெண்கள் வறுமை மயமாதல் என்பதற்கான அங்கீகாரத்தினையும் இது வெளிப்படுத்த வேண்டும்.
*நிலைபேறான விவசாயம், சுற்றுச்சூழல் முகாமைத்துவம் போன்றவற்றில் பெண்களின் பங்களிப்பினை அங்கீகாரப்படுத்தி, இத் துறைகளில் அவர்களின் பங்கினைப் பாதுகாப்பதற்கும் மற்றும் அவர்களது நில உடமைக்காலம் மற்றும் பொருளாதார வளங்களினை உறுதிப்படுத்தவும் விசேட நடவடிக்கைகளினை மேற்கொள்ளல்.
*ஓய்வூதியங்களை அதிகரித்தல் மற்றும் விவசாயிகளின் கடன்களை இல்லாது செய்வதன் மூலம் பெண் மற்றும் ஆண் விவசாயிகள் இருவருக்கும் ஆதரவளித்தல்.
*நுண் கடன் மற்றும் நுண் நிதி நிறுவனங்களை வினைத்திறன் மிக்க வகையில் கண்காணிப்பதற்கு மற்றும் ஒழுங்குபடுத்துவதற்கும் உறுதியான சட்டங்களை அறிமுகப்படுத்தல்
*வீட்டுப் பணிப்பெண்களுக்கான கண்ணியமான வேலை தொடர்பான பிரகடனம் 189 இனை ஏற்புறுதி செய்தல்.
*வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு புலம்பெயர்வதற்கு பெண்களின் உரிமைகளை வரையறுக்கும் நடைமுறையிலுள்ள அனைத்து பாரபட்சமான ஒழுங்கு விதிகளையும் மீளப்பெறல்.