மேற்காசிய அரசியல் களம் புதிய மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது. கடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முதல் ரஷ்யாவின் கை ஓங்கியிருந்தது. குறிப்பாக சிரியத் துறைமுகமான Tartus கைப்பற்றியதை அடுத்து மேற்காசியாவின் அரசியல் இராணுவ சமநிலை அமெரிக்காவிடமிருந்து ரஷ்யாவிடமும் அதன் கூட்டணியான சீனா, ஈரான் போன்ற நாடுகளின் வசமும் ஆனது. அத்தகைய களத்தினை அமெரிக்கா மீளவும் கைப்பற்ற பல உத்திகளை வகுத்த போதும் எதுவும் சாத்தியமாகவில்லை. தற்போது மீண்டும் ஒரு முயற்சியை மேற்கொண்டுள்ளது. அதிலும் அமெரிக்கா வெல்லுமா அல்லது அக்களம் தொடர்ந்து ரஷ்யாவிடம் இருக்கப் போகிறதா என்பதை தேடுவதே இக்கட்டுரையின் வெளி-ப்பாடாகும்.
சிரியாவின் இட்லிப் மாகாணம் அதிக நெருக்கடியை சிரியக் கூட்டணிப் படைகளுக்கு ஏற்படுத்தி வருகிறது. மிக நீண்ட காலமாக அங்கு கிளர்ச்சிக் குழுக்களுக்கும் சிரியத் தரப்புக்கும் போர் நிகழ்ந்து கொண்டிருகிறது. அதில் ஆரம்பத்தில் கிளர்ச்சிப் படைகளும் பின்பு சிரிய அரச படைகளும் ஆதிக்கம் செலுத்தி வந்தன. தற்போது மீண்டும் கிளர்ச்சிப் படைகள் தீவிர தாக்குதலை மேற்கொண்டு வருகின்றன. கடந்த எட்டு ஆண்டுகளாக நடைபெற்றுவரும் போர் பல இலட்சம் மக்களை கொன்றழித்ததுடன், அமைதியற்ற நிலையில் பல இலட்சக்கணக்கான மக்களை அகதிகளாக்கியுள்ளது. இத்தகைய போருக்கு ஓரளவு முடிவு எட்டும் விதத்தில் அண்மைய வாரத்தில் (01.09.2019) ஜிகாதி கிளர்ச்சிப் படைகளுடன் ஓர் ஒப்பந்தம் கைச்சாத்தானது குறிப்பிடத்தக்கதாகும். இந்த உடன்பாட்டை வரவேற்றுள்ள ஐ.நா. சபை அதற்கான முதல் கட்ட முயற்சியை பராட்டியுள்ளது.
சிரியாவும் ரஷ்யாவும் இணைந்து நிகழ்த்திய விமானத் தாக்குதலை நிறுத்தியிருந்ததுடன் இட்லிப் பிராந்தியம் அமைதியான சூழலை அனுபவிக்க ஆரம்பித்தது. ஏற்கனவே, ஓர் உடன்பாடு எட்டப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் இது இரண்டாவது உடன்படிக்கையாகும். இதனைக் கைச்சாத்திட்டு சில மணி நேரத்தில் அமெரிக்கா தனது ஏவுகணைகளால் பெரும் தாக்குதல் ஒன்றினை சிரியா மீது நிகழ்த்தியது. அதில் ஏறக்குறைய 40 ஜிகாத் கிளர்ச்சி தலைவர்கள் கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது. அத்தகைய தாக்குதலை அமெரிக்காவே நிகழ்த்தியதாக பென்டகன் அறிவித்துள்ளது.
இத்தாக்குதல் பற்றி பென்டகன் தெரிவிக்கும் போது, சிரியாவில் அல்-ைகதா தலைவர்களை குறிவைத்தே தாக்குதல் நிகழ்த்தப்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளது. இது எத்தகைய தாக்குதல் என்பதை இதுவரை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால் அமெரிக்காவின் மத்திய கட்டளைப் பிரிவு வெளியி-ட்ட அறிக்கையில் ஜிகாதிகள் மீதான தாக்குதல் எனக் குறிப்பிட்டுள்ளது. எனவே, தான் அமெரிக்காவின் இத்தாக்குதலில் திட்டமிடப்பட்டது என்பதுவும் சமாதான உடன்பாட்டின் மீதான தாக்குதலாகவும் இது பார்க்கப்படுகிறது. எனவே, அமெரிக்கா திட்டமிட்ட அடிப்படையில் சிரிய அரசு மீதும், ரஷ்யா மீதும் குற்றம் சாட்டினாலும், தாக்குல் தொடரவும் அமைதியற்ற சூழலுக்கும் காரணமாகவும் அமெரிக்கா அமைந்துள்ளது.
இதன் மூலம் அப்பிராந்தியத்தில் அமைதியின்மைக்கும் அழிவுகளுக்கும் மோதல் தொடர வேண்டும் எனவும் அமெரிக்கா திட்டமிடுகிறது. இது அமெரிக்க இஸ்லாமியரை, இஸ்லாமியர் மூலம் அழிப்பதற்கான திட்டமிடலாகவே தென்படுகிறது. ஏற்கனவே ஐ.எஸ் இன் உண்மையான முகம் இஸ்லாத்தை இஸ்லாத்தின் மூலம் அழிப்பதாகவே அமைந்திருந்தது. அது பின்பு மாறியது வேறு கதை. அவ்வகை உத்தியை அமெரிக்கா, - சிரியா விடயத்திலும் கைக்கொள்ள முனைகிறது. இதன் மூலம் தொடர்ச்சியான ஆதிக்கத்தினை வைத்துக் கொள்ள முடியும்.
இட்லிப் மாகாணத்தில் சுமார் 35,000 ஜிஹாதிகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ஹயாத் தஹரிர், அல்ஷிம், அல்நுஸ்ரா என்பன இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இவ்வமைப்பானது இட்லிப் மாகாணத்திலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் செயற்படுகின்றன.
இதே நேரம் அமெரிக்கா இன்னொரு முயற்சியையும் இப்பிராந்தியத்தில் முன்னெடுத்து வருகிறது. கடந்த ஆண்டு முதல் துருக்கி சிரியக் கிளர்ச்சி-ப்படைகள் மீதான தாக்குதலை மட்டுப்படுத்துமாறும் போரைத் தவிர்க்குமாறும் சிரியாவுக்கு தெரியப்படுத்தி வருகிறது.
இவ்வகைத் தாக்குதலால் துருக்கியை நோக்கி படையெடுக்கும் அகதிகளை கையாள முடியாது திணறுவதுடன், தாக்குதலில் ரஷ்யப் படைகளும் ஈரான் படைகளும் ஈடுபட்டிருப்பதனால் அதிக நெருக்கடியை எதிகாலத்தில் துருக்கியின் எல்லைப் பகுதி எதிர்கொள்ளலாம் என துருக்கி கருதுகிறது. அதனைவிட கிளர்ச்சிப் படைகள் வெளியேறுவதாலும் துருக்கியின் மீது அதன் தாக்குதல்கள் நிகழ்வதுடன் அதிகமான கிளர்ச்சிப் படைகள் தமது எல்லைக்குள்ளும் உருவாகலாம் எனக் கருதுகிறது. இதனால் துருக்கி, சிரி-யா ரஷ்யத் தரப்புடன் உடன்பாட்டுக்கும் பாதுகாப்பு வலையம் ஒன்றினை தனது எல்லைப்பகுதியில் ஏற்படுத்துவதற்கும் முயன்றுள்ளது. அது சாத்தியப்படாத போது துருக்கி தனது சொந்த செயல் திட்டத்தை செயற்படுத்தும் என்று துருக்கி ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகோன் தெரிவித்தார். அது மட்டுமன்றி ஐ.நா பொதுச் சபைக் கூட்டத் தொடரில், கிழக்கு யூப்பிரடிஸ் பகுதியில் பாதுகாப்பான வலயத்தை உருவாக்குவதில் அமெரிக்காவுடன் பேசப்போவதாக எர்டோகோன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஈரான் வெளிவிவகார அமைச்சர் தெரிவிக்கையில், “கிழக்கு யூப்பிரடிஸில் பாதுகாப்பு வலயம் சட்டவிரோதமானது மற்றும் அழிவுகரமானது. இது பிராந்திய நாடுகளுக்கிடையிலான மோதலை வலுப்படுத்தவே வழிவகுக்கும். இதனை சிரியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டின் மீறலாக நாங்கள் பார்க்கிறோம். இப்பகுதியில் அமெரிக்காவின் இருப்பு ஏற்படுவதை நாங்கள் கொள்கை ரீதியாக ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.
எனவே, மீண்டும் ஒரு முயற்சியை அமெரிக்கா ஆரம்பித்துள்ளது. ஆனால் அது வெறும் பிராந்திய நாடுகளின் புவிசார் அரசியல் நிமித்தம் ஏற்பட்டதாகும். அதன் இருப்பு அந்தந்த நாடுகளது வலிமையிலும் ஆட்சி இருப்பிலும், புவிசார் அரசியல் இருப்பிலும் தங்கியுள்ளது. ஆனாலும் அமெரிக்கா எதிரணிக்கு ஒரு நெருக்கடியை கொடுக்க முனைகிறது.
கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்